Pages

Wednesday 16 October 2013

அடையாளம் காண இயலாத பறக்கும் பொருள்கள் UFO(unidentified flying objects)

                              
    UFO ன் விரிவாக்கமே அடையாளம் காண இயலாத பறக்கும் பொருள்கள் (unidentified flying objects).ஆகும் இந்த சொல்லானது பொதுவாக வேற்றுலகவாசிகளின் (alien)பறக்கும் தட்டை முன்னிறுத்திச்சொல்லப்படுகின்றது .இந்த ufo 1953 ம் வருடம் ஐக்கிய நாடுகளின் விமானப்படை.USAF (United states air force) ஆல் உருவாக்கப்பட்டது. ஸ்பானிஷ், பிரெஞ்சு,போர்ச்சுகீஸ், மற்றும் இத்தாலியன்மொழிகளில் யுஎஃப்ஒஎன்பதற்கு வேறு ஒரு சொல் புதிதாக உருவாக்கப்பட்டது. அதுதான் ஓவிஎன்ஐ (OVNI)ஆகும். 
                                 வான்வெளியில பறக்கும் பொருளானது எந்த விதிகள், பண்புகளை கொண்டு பறக்கின்றது மேலும் நமக்குத்தெரிந்த விமானம், ஏவுகணை மற்றும் வின்ஊர்தி ஆகியவற்றின் வடிவமைப்புடன் ஒத்துவருகின்றத என புலன்விசாரணை செய்யப்பட்டு அவை ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால் அவை UFO பிரிவில் சேர்க்கப்படுகின்றது. இதுவரை மேற்கொண்டுள்ள UFO ஆய்வுகளில் ஒரு சிலவே கட்டுகதைகள் எனஅறியப்படுகின்றன. ஆனால்பெரும்பான்மையான ஆய்வுகளில்நமக்குத்தெரிந்த பொருட்களாக அமைந்துள்ளன. அதில்பொதுவாக விமான ஊர்திகள், ஆகாயபலூன்கள்,
அல்லது வான்வெளி பொருள்கள் அதாவது எரிமீன்கள் மற்றும் பிரகாசமான கிரகங்கள் இடம்பெறுவதுடன் அவைகள் தவறுதலாக உற்று நோக்கர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.பார்வையில் கண்டதை அறியப்படுத்துவதில் ஒரு சிறிய சதவீதமே (வழக்கமாக 5 முதல் 20
வரையில்) பறக்கும் பொருள்கள் அடையாளம் காண முடியாமல்
UFO -வில் வகைப்படுத்த
ப்பட்டுள்ளன. சில விஞ்ஞானிகளின் வாதம்
என்னவெனில், எல்லா UFO பார்வையில்பட்ட  இயற்கை விந்தைகளை தவறாக அடையாளம் கண்டுகொண்டதே ஆகும்.
                                  
Project Blue Book
ஆலன் ஹைனெக் ஒரு பயிற்சி பெற்ற வானாராய்ச்சியாளர் ஆவார்.அவர் புராஜெக்ட் புளுபுக் (project blue book)
திட்டத்தில் பங்குபெற்றவர் ஆவார்.முன்னதாக அவர் பெடரல் அரசு
ஊழியராக பணிபுரிந்துள்ளார். அவர் ஒருகருத்தை வெளியிட்டார். அதாவது சில யுஎஃப்ஒ அறிக்கைகள் அறிவியல் பூர்வமாக விவரிக்க இயலாததாகும். மேலும் அவர் யுஎஃப்ஒ ஏடாய்வுகள் பற்றிய ஓரு
நிறுவனத்தை உருவாக்கியவரும் ஆவார். சியுஎப்ஓக்களிலும் அவர்
பங்கேற்றுள்ளார். அப்படிப்பட்ட அவர் தனது எஞ்சிய வாழ்நாளை யுஎப்ஓக்களின் ஏடுகளை ஆராய்வதிலும் ஆவணச் சான்றுகள் உருவாக்குவதிலும் ஈடுபாட்டார். 

                          1878 ஆண்டு ஜனவரி 25 ஆம் நாள் தி டெனிஸன் டெய்லி நியூஸ் எழுதியது: ஓர் உள்ளூர் விவசாயி ஜான் மார்ட்டின் அறிக்கையில் சொன்னதாக தெரிவித்திருந்தது என்னவெனில், அவர் ஒரு பெரிய கரிய வட்ட வடிவ பறக்கும் பொருள் கண்டதாகவும் அது பலூன் வடிவில் ஒத்திருந்ததாகவும் மேலும் ஆச்சரியமான வேகத்தில் பறந்து சென்றதாகவும் சொன்னார். மார்ட்டின் மேலும் சொன்னார்: அது ஒரு தட்டுவடிவத்தில் தோன்றியிருந்ததென்றும் குறிப்பிட்டுள்ளார், முதல் முதல் சாஸர் என்ற சொல் பிரயோகத்திற்கு வந்ததாகவும் அதுவும்
UFO வுடன் இணைந்திருந்ததாகவும் தகவல் வெளியிட்டது.

                     
  ஜூன் 24,1947ல்! அமெரிக்க வணிகர் கென்னெத் அர்னால்ட் தன்
புகழ்வாய்ந்த காட்சியினை கண்டது அவர்தனிப்பட்ட விமானத்தில் ரைனியர் மலை மற்றும் வாஷிங்டன் பகுதிகளில் பயணம் மேற்கொண்ட போதுதான் ரைனியர் மலை முகட்டில் ஒன்பது மின்னிடும் ஒளிச்சுடர் மிக்க பொருள்கள் பறந்து சென்றதாக தன் அறிக்கையில் கூறியுள்ளார் மேலும் UFOபற்றி www.ufoevidence.org தளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment