Pages

Friday 11 October 2013

செவ்வாய் கிரகத்தில் குடியேறலாம்


செவ்வாய்கிரகத்தில்   தண்ணீர் இருக்கும !, அங்கு மனிதன் வாழ முடியும ! என்று பல்வேறு ஆராய்சிகள் நடைபெற்று வரும் இன்நாளில் செவ்வாய்கிரகத்தில் மனிதன் குடியேறலாம் என்று டச்சு நாட்டை சர்ந்த லாப நோக்கம் கருதாத ஒரு அறக்கட்டளை மார்ஸ் ஒன் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது . அதாவது இந்த திட்டத்தில் ஒருமுறைதான் செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் (மீண்டும் பூமிக்கு அழைத்துவர எந்த ஏற்பாடும் இல்லை) அங்கு மக்கள் வசிப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்படும்.
            இத்திட்டத்தின் படி 2013 ல் பயிற்ச்சி குடியிறுப்பு அமைக்கப்படும் , 2014 ல் முதல் தகவல்தொடர்பு செயர்கைகோள் தயாரிக்கப்படும் , 2015ல் வானவெளிப்பயணிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், 4 பேர் கொண்ட 6 குழு அமைக்கப்படும், 2016 ல் கட்டமைப்புக்கு தேவையான சுமார் 2500 கிகி பொருள் அனுப்பப்படும் .2018ல் செவ்வாயில் குடியிருப்புபகுதியை தேர்ந்தெடுக்க செயற்கை ஆய்வு ஊர்தி(exploration vehicle) அனுப்பப்படும். 2022ல் முதல் குழு அனுப்பப்படும். 2023ல் முதல் குழு செவ்வாயை அடைவார்கள் ,2025ல் இரண்டாம் குழு சென்றடைவார்கள் ,2033ல் செவ்வாயில் 20வது குடியிருப்புவாசிகள் என்ற நிலையை அடையும். 
           இத்திட்டத்தில் இதுவரை உலகம் முலுவதும் இருந்தும் 65,000 பேர் விண்ணப்பித்துள்ளார்கள் , இந்தியாவில் இருந்து மட்டும் 8,107 பேர்  விண்ணப்பித்துள்ளார்கள் . 2023 -ம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்  18 வயதுக்கு மேற்பட்ட யார்  வேண்டுமானாலும் www.marsone.com என்ற இனணயதளத்தில் விண்ணப்பக்கலாம்

No comments:

Post a Comment