Pages

Sunday 2 March 2014

நோக்கியாவின் புதிய x- வரிசை அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்



நோக்கியா X மற்றும் X+,XL என்ற தனது முதல் அண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது.

    

நோக்கியா நிறுவனம் நீண்டகாலமாக google -ன் அண்ட்ராய்டு இயங்குதளத்தை (os) தனது மொபைல்களில் பயன்படுத்துவதை தவிர்த்து Microsoft -ன் windows mobile இயங்குதளத்தை பயன்படுத்தி மொபைல்களை வெளியிட்டது, ஆனால் windows mobile -கள் மக்களிடையே பெரிய வரவேற்ப்பை பெறவில்லை.



        இந்தியாவில் மொபைல் விற்பனையில் முதலிடத்தில் இருந்த நோக்கியா , அண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்திய சாம்சங் ,சோனி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் வரவால் பின்னுக்குத்தள்ளப்பட்டது , எனவே நோக்கியா தன் மொபைல் விற்பனையை அதிரிக்க அண்ட்ராய்டு மொபைல்களை அறிமுகப்படுத்த உள்ளது .


       

 வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்


         நோக்கியாவின் X,X+ மற்றும் XL ஆகியவை 1GHz dual-core Qualcomm Snapdragon 8225 chipset –ஐ கொண்டது ,மேலும் இவை 4gb உள்நினைவத்தையும்,32gb மெமரி கார்டையும் பயன்படுத்தலாம் .



   Xமற்றும் X+ ஆகியவை 4" இன்ச் 800x480 IPS LCD capacitive தொடுதிரையை கொண்டது ,மேலும் இதன் pixel density  233ppi ஆகும் , X 512mb ram –ஐயும், 

X+, XL 768 ram–ஐயும் உடையது, Xமற்றும் X+ ஆனது 3mp fixed focusகேமரா வையும், XL 5mp auto focus கேமராவையும் உடையது