Pages

Tuesday, 28 July 2015

INTEL - ன் புதிய இன்டெல் கம்பியூட் ஸ்டிக் (intel compute stick) , windows 8.1 bing இயங்குதளத்தை கொண்டு தற்போதைய விற்பனையில்

          அறிவியல் முன்னேற்றத்தினால் பல புதிய சாதனங்கள் உருவாக்கப்பட்டு அவை மக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன,அந்த வரிசையில் தற்போது இன்டெல் நிறுவனம் தனது இன்டெல் கம்பியூட் ஸ்டிக் எனும் சாதனத்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளதது


இன்டெல் கம்பியூட் ஸ்டிக் :
          ஒரு காலத்தில் பொரிய இடத்தை அடைத்துக் கொண்ட கணிப்பொறி அதன் பிறகு மேசைக் கணினி ஆனது, பிறகு மடிக்கணினியாக உருவானது, இப்போது அது மிகவும் சுருங்கி நம் கையினுள் அடங்கும் அளவிற்கு இன்டெல் நிறுவனம் இன்டெல் கம்பியூட் ஸ்டிக்(intel compute stick) எனும் சாதனத்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது



 சிறப்பம்சம்:   
          கையடக்க பென்டிரைவ் (Pen drive) வடிவில் இச் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்டிக்கை HDMI இனைப்பு முறையில் நம் தொலைக்காட்சியில் (TV) உடன் இணைத்துப் பயன்படுத்த முடியும் , இன்டெல் கம்யூட் ஸ்டிக்கானது Microsoft இன் வின்டோஸ் 8.1 பிங் (windows8.1 bing) எனும் இயங்குதளத்தினை கொண்டுள்ளது ,மேலும் இந்தச் சாதனம் எந்த ஒரு HDMI இணைப்பு கொண்ட திரைக்கருவியிலும் பயன்படுத்தலாம்.
இச் சாதனம்
processor: quard core intel atom processor           Z3735F (1.3Ghz), 
Ram: 2GB DDR3,   
Storage : 32GB,  
Intel HD Graphics, 
hdmi port, 
Bluetooth, 
Wifi, 
USB 2.0
ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.


                 இந்தச் சாதனம் ரூபாய் Rs 9,999 ற்கு தற்போது சந்தைகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் இச்சாதனம் Flipkart, amazion போன்ற ஆன்லைன் தளங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

Saturday, 12 July 2014

புதிய வரவு ஆண்டிராய்டு ஸ்மார்ட் வாட்சு( Android smartWatch) google - ன்Android Wear இயங்குதளத்தைப் பயன்படுத்தி வெளியாகியுள்ளது


           
          அறிவியல் முன்னேற்றத்தின் புதிய வரவாக  ண்டிராய்டு        ஸ்மார்ட் வாட்சு( Android  smartWatch) google - ன் Android Wear இயங்குதளத்தைப் பயன்படுத்தி வெளியாகியுள்ளது.
   
          Android Wear- ஆனது google ன் ஆண்டிராய்டு ஸ்மார்ட்டு வாட்சு(smart watch) களுக்கான இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஆண்டிராய்டு இயங்குதளம் பதிப்பு 4.3 + -ல் செயல்படும் ஆண்டிராய்டு மொபைல்களில் Google Now- ன் மூலம் இணைக்கலாம். இத்திட்டத்தில்  மொபைல் தயரிப்பில் முன்னனி நிறுவனங்களான Motorola ,Samsung , lg, htc, asus - ஆகியவை இணைந்துள்ளன.

    Android Wear - ஐ பயன்படுத்தி Samsung -  நிறுவனத்தின் Gear Live மற்றும் LG–யின் G Watch - ஆகியவை விற்பனைக்கு வர உள்ளது ,மேலும் Motorola நிறுவனம் தனது Moto 360 smart watch-ஐயும் அறிமுகப்படுத்த உள்ளது, இந்த android wear ஆனது வட்டம் மற்றும் சதுரம் ஆகிய இரண்டு வடிவ வடிவமைப்பு வாட்சுகளுக்கும் ஏற்றது
   
   சிறப்பம்சங்கள் :            
             
                  இந்த android wear ஆனது நமது தகவல்களை ஒருங்கிணைப்பதோடு ,நமக்குத்தேவையான தகவல்களை நாம் கேட்கும் முன்பே காட்டுகின்றது ,மேலும் இது நமது நண்பர்களிடமிருந்து வரும் குறுந்தகவல்களையும்(message) ,முன்னேற்பாடுகளையும் (appointment), வானிலை மாற்றத்தையும் காட்டுகின்றது.
       

     இந்த android wear - ல் நமது குரலை பயன்படுத்தி எழுத்துக்களை தட்டச்சு செய்யவும், குறுந்தகவல்கள் மற்றும் Email ஆகியவற்றையும் பயன்படுத்தலாம், இதன் மூலம் நமக்குத்தேவையான தகவல்களை நேரடியாக கேட்டும் பெறலாம்.


         android wear - ஐ smart phone - உடன் இணைத்து பாடல்களை கேட்கவும், நிறுத்தவும் ,தவிர்க்கவும் முடியும் ,மேலும் குறுந்தகவல்களுக்கு எளிதாக பதிலும் தரலாம்.

        மேலும் இந்த android wear மூலம் நமது அன்றாட உடற்பயிற்ச்சித்தகவல்கள் மற்றும் இதயத்துடிப்பு சார்ந்த தகவல்களைப்பெறலாம், இந்த இதயத்துடிப்பு சார்ந்த தகவல்களை Heart rate monitor உள்ள smart watch - களில் மட்டுமே பெற முடியும்
    
      பொதுவாக Watch - கள் நேரத்தையும் ,தினத்தையும் மட்டுமே காட்டிய இந்நிலையில் ,மக்களுக்குப் பயன்னுள்ள இது போன்ற பல சாதனங்கள்   மக்களின் தேவைகளை  எளிமையாக்குகின்றன ,அவ்வகையில் இந்த android smart watch - கள் மக்களின் அன்றாட தேவைகளை எளிமையாக்கும் எனலாம்.

Thursday, 17 April 2014

Google-ன் android ற்கு போட்டியாக Mozilla-ன் firefox மொபைல் இயங்குதளம் அறிமுகம்





Firefox மொபைல் இயங்குதளம்  அறிமுகம்

        Google-ன் android மொபைல் இயங்குதளத்திற்கு  போட்டியாக Mozilla-நிறுவனம் தனது firefox மொபைல் இயங்குதளத்தை வெளியிட்டு உள்ளது. 

        Nokia மற்றும் Microsoft ஆகியவற்றின் மொபைல் இயங்குதளத்தை பயன்படுத்தி பல நிறுவனங்கள் தனது smart Phone - களை விற்பனைக்கு கொண்டுவந்தன, மேலும் APPLE நிறுவனம் தனது iPhone ற்கான iOS இயங்குதளத்தை வடிவமைத்து பயன்படுத்தியது ,இந்நிலையில் google நிறுவனம் தனது Smart Phone - க்கான Android இயங்குதளத்தை வடிவமைத்து வெளியிட்டது .இந்த இயங்குதளம் 
பயன்படுத்துவதற்கு எளிமையனதாகவும் பல Apps -களை தனது இயங்குதளத்தின் மூலமாகவே கொடுத்ததாலும் வாடிக்கையாளர்களிடம் பிரபலமடைந்தது.

     Android வெளிவந்த பிறகு Smart Phone - ன் வளர்ச்சி பல மடங்காக பெருகியது . Samsung நிறுவனம் இந்த இயங்குதளத்தை தனது Smart Phone - களில் புகுத்தி மொபைல் சந்தையில் அதிக  லாபத்தை ஈட்டியது ,ஆனால் Nokia நிறுவனம் Android - ஐ தனது Smart Phone - களில் பயன்படுத்துவதை தவிர்த்ததால் மொபைல் விற்பனையில் சரிவை சந்தித்து தனது நிறுவனத்தையே Microsoft - இடம் இழந்தது எனலாம் .


       இனைய உலாவி(Firefox Browser ) வடிவமைப்பில் முக்கிய நிறுவனமான Mozilla - வானது நீண்ட காலமாக மொபைல் இயங்குதளத்தை வெளியிடுவதாக இருந்தது பிறகு firefox OS - ன் முதல் பதிப்பை சோதனை பதிப்பாக வெளியிட்டது, இதில் இருந்த பிழைகளை நீக்கி தற்போது இதன் முழு பதிப்பு Firefox OS 2.0 -ஐ வெளியிட்டுள்ளது .

       Firefox os - ஐ கொண்ட தனது Smart Phone ஐ LG மற்றும் ZTE நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளது ,மேலும் Sony நிறுவனம் தனது Xperia E - க்கான சோதனை பாதிப்பை (Testing ROM ) ஐ வெளியிட உள்ளது ,எனவே இதன் மூலம் Sony நிறுவனமும் தனது smart  Phone- களில் Firefox OS - ஐ பயன்படுத்த உள்ளதை அறியலாம்.

Firefox os ன் அம்சங்கள் :

Firefox OS 2.0 will get a more active lock screen that shows a scrolling list of notifications and music controls.notification

     பயர்பாக்ஸ் os 2.0 ஆனது copy மற்றும் past ஆகிய செயல்பாடுகளை ஆதரிக்கின்றது ,மேலும் இது பயன்பாடுகளை( Apps ) - ஐ தொடங்குவதற்கு உலகளாவிய தேடல் நுட்பத்தை (universal-search mechanism)  கொண்டுள்ளது ,புதிய lock screen மற்றும் தொலைபேசி எண் அமைப்பு ஆகியவை mozilla firefox os - ன் வெற்றிக்கு முக்கிய அம்சங்களாக இருக்கும் எனலாம்






Sunday, 2 March 2014

நோக்கியாவின் புதிய x- வரிசை அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்



நோக்கியா X மற்றும் X+,XL என்ற தனது முதல் அண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது.

    

நோக்கியா நிறுவனம் நீண்டகாலமாக google -ன் அண்ட்ராய்டு இயங்குதளத்தை (os) தனது மொபைல்களில் பயன்படுத்துவதை தவிர்த்து Microsoft -ன் windows mobile இயங்குதளத்தை பயன்படுத்தி மொபைல்களை வெளியிட்டது, ஆனால் windows mobile -கள் மக்களிடையே பெரிய வரவேற்ப்பை பெறவில்லை.



        இந்தியாவில் மொபைல் விற்பனையில் முதலிடத்தில் இருந்த நோக்கியா , அண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்திய சாம்சங் ,சோனி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் வரவால் பின்னுக்குத்தள்ளப்பட்டது , எனவே நோக்கியா தன் மொபைல் விற்பனையை அதிரிக்க அண்ட்ராய்டு மொபைல்களை அறிமுகப்படுத்த உள்ளது .


       

 வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்


         நோக்கியாவின் X,X+ மற்றும் XL ஆகியவை 1GHz dual-core Qualcomm Snapdragon 8225 chipset –ஐ கொண்டது ,மேலும் இவை 4gb உள்நினைவத்தையும்,32gb மெமரி கார்டையும் பயன்படுத்தலாம் .



   Xமற்றும் X+ ஆகியவை 4" இன்ச் 800x480 IPS LCD capacitive தொடுதிரையை கொண்டது ,மேலும் இதன் pixel density  233ppi ஆகும் , X 512mb ram –ஐயும், 

X+, XL 768 ram–ஐயும் உடையது, Xமற்றும் X+ ஆனது 3mp fixed focusகேமரா வையும், XL 5mp auto focus கேமராவையும் உடையது





Wednesday, 16 October 2013

அடையாளம் காண இயலாத பறக்கும் பொருள்கள் UFO(unidentified flying objects)

                              
    UFO ன் விரிவாக்கமே அடையாளம் காண இயலாத பறக்கும் பொருள்கள் (unidentified flying objects).ஆகும் இந்த சொல்லானது பொதுவாக வேற்றுலகவாசிகளின் (alien)பறக்கும் தட்டை முன்னிறுத்திச்சொல்லப்படுகின்றது .இந்த ufo 1953 ம் வருடம் ஐக்கிய நாடுகளின் விமானப்படை.USAF (United states air force) ஆல் உருவாக்கப்பட்டது. ஸ்பானிஷ், பிரெஞ்சு,போர்ச்சுகீஸ், மற்றும் இத்தாலியன்மொழிகளில் யுஎஃப்ஒஎன்பதற்கு வேறு ஒரு சொல் புதிதாக உருவாக்கப்பட்டது. அதுதான் ஓவிஎன்ஐ (OVNI)ஆகும். 
                                 வான்வெளியில பறக்கும் பொருளானது எந்த விதிகள், பண்புகளை கொண்டு பறக்கின்றது மேலும் நமக்குத்தெரிந்த விமானம், ஏவுகணை மற்றும் வின்ஊர்தி ஆகியவற்றின் வடிவமைப்புடன் ஒத்துவருகின்றத என புலன்விசாரணை செய்யப்பட்டு அவை ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால் அவை UFO பிரிவில் சேர்க்கப்படுகின்றது. இதுவரை மேற்கொண்டுள்ள UFO ஆய்வுகளில் ஒரு சிலவே கட்டுகதைகள் எனஅறியப்படுகின்றன. ஆனால்பெரும்பான்மையான ஆய்வுகளில்நமக்குத்தெரிந்த பொருட்களாக அமைந்துள்ளன. அதில்பொதுவாக விமான ஊர்திகள், ஆகாயபலூன்கள்,
அல்லது வான்வெளி பொருள்கள் அதாவது எரிமீன்கள் மற்றும் பிரகாசமான கிரகங்கள் இடம்பெறுவதுடன் அவைகள் தவறுதலாக உற்று நோக்கர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.பார்வையில் கண்டதை அறியப்படுத்துவதில் ஒரு சிறிய சதவீதமே (வழக்கமாக 5 முதல் 20
வரையில்) பறக்கும் பொருள்கள் அடையாளம் காண முடியாமல்
UFO -வில் வகைப்படுத்த
ப்பட்டுள்ளன. சில விஞ்ஞானிகளின் வாதம்
என்னவெனில், எல்லா UFO பார்வையில்பட்ட  இயற்கை விந்தைகளை தவறாக அடையாளம் கண்டுகொண்டதே ஆகும்.
                                  
Project Blue Book
ஆலன் ஹைனெக் ஒரு பயிற்சி பெற்ற வானாராய்ச்சியாளர் ஆவார்.அவர் புராஜெக்ட் புளுபுக் (project blue book)
திட்டத்தில் பங்குபெற்றவர் ஆவார்.முன்னதாக அவர் பெடரல் அரசு
ஊழியராக பணிபுரிந்துள்ளார். அவர் ஒருகருத்தை வெளியிட்டார். அதாவது சில யுஎஃப்ஒ அறிக்கைகள் அறிவியல் பூர்வமாக விவரிக்க இயலாததாகும். மேலும் அவர் யுஎஃப்ஒ ஏடாய்வுகள் பற்றிய ஓரு
நிறுவனத்தை உருவாக்கியவரும் ஆவார். சியுஎப்ஓக்களிலும் அவர்
பங்கேற்றுள்ளார். அப்படிப்பட்ட அவர் தனது எஞ்சிய வாழ்நாளை யுஎப்ஓக்களின் ஏடுகளை ஆராய்வதிலும் ஆவணச் சான்றுகள் உருவாக்குவதிலும் ஈடுபாட்டார். 

                          1878 ஆண்டு ஜனவரி 25 ஆம் நாள் தி டெனிஸன் டெய்லி நியூஸ் எழுதியது: ஓர் உள்ளூர் விவசாயி ஜான் மார்ட்டின் அறிக்கையில் சொன்னதாக தெரிவித்திருந்தது என்னவெனில், அவர் ஒரு பெரிய கரிய வட்ட வடிவ பறக்கும் பொருள் கண்டதாகவும் அது பலூன் வடிவில் ஒத்திருந்ததாகவும் மேலும் ஆச்சரியமான வேகத்தில் பறந்து சென்றதாகவும் சொன்னார். மார்ட்டின் மேலும் சொன்னார்: அது ஒரு தட்டுவடிவத்தில் தோன்றியிருந்ததென்றும் குறிப்பிட்டுள்ளார், முதல் முதல் சாஸர் என்ற சொல் பிரயோகத்திற்கு வந்ததாகவும் அதுவும்
UFO வுடன் இணைந்திருந்ததாகவும் தகவல் வெளியிட்டது.

                     
  ஜூன் 24,1947ல்! அமெரிக்க வணிகர் கென்னெத் அர்னால்ட் தன்
புகழ்வாய்ந்த காட்சியினை கண்டது அவர்தனிப்பட்ட விமானத்தில் ரைனியர் மலை மற்றும் வாஷிங்டன் பகுதிகளில் பயணம் மேற்கொண்ட போதுதான் ரைனியர் மலை முகட்டில் ஒன்பது மின்னிடும் ஒளிச்சுடர் மிக்க பொருள்கள் பறந்து சென்றதாக தன் அறிக்கையில் கூறியுள்ளார் மேலும் UFOபற்றி www.ufoevidence.org தளத்தில் அறியலாம்.

Friday, 11 October 2013

புதிய IBALL ன் Hybird dual connector pen drive

                            Iball தனது புதிய pendrive ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இது hybird dual connector pendrive என பெயரிடப்பட்டுள்ளது. இந்த pendrive ன் ஒரு முனை சாதாரண usb 2.0 வையும் ,அடுத்த முனை micro usb இணைப்பையும் கொண்டு�ள்ளது. இந்த pendrive ன் ஒரு முனை mobile மற்றும் tablet உடன் OTG செயலி முலம் இணைப்பை பெறுகின்றது . இதன் அடுத்த முனை pc மற்றும்laptop ஆகியவற்றில் தகவல்களை பதிவு செய்யவும் ,பெறவும் பயன்படும். இதன் எடை 10 கிராம் மட்டுமே எனவே இதை எடுத்துச்செல்வது எளிது. நீடித்து உழைக்கக்கூடிய அலுமினியத்தை கொண்டு இதன் மேற்பகுதி தயாரிக்கப்பட்டுள்ளது. 
                          இதன் விலை 8gb rs 599 மற்றும் 16gb rs 799 என தெரிகின்றது .இது இந்தியாவில் இரண்டு வருட ஈட்டுரறுதி(warranty) உடன் கிடைக்கும்

விலை குறைந்த lphone 5C



            
கையடக்க தொலைபேசிகளில் பல

தொழில்நுட்பங்களை
புகுத்தி விற்பனை செய்வதில்
முதன்மையாக இருப்பது apple நிறுவனத்தின்
-ன் iPhone ஆகும் .
            தற்போது இதன் புதிய
வரவாக iPhone 5s  உள்ளது. இதுபல புதிய
வசதிகளுடன்  உள்ளது.பொதுவாக iPhone
mobile ஆனது அதிகமான விலையுள்ளதாக
இருக்கும் .எனவே வளரும் நாடுகளில் iPhone-
ன் விற்பனை குறைவாகவே உள்ளது . இதனால்
iPhone -னின் விற்பனையை அதிகரிக்க apple
நிறுவனம் விலை குறைவான iPhone 5c ஐ
அறிமுகப்படுத்த உள்ளது.இதன் விலை சுமார்
$400 (rs26000) வரை இருக்கலாம் . பொதுவாக
iPhone-களின் body உலோகக்கலவையில்
தயாரிக்கப்படும்.ஆனால் iPhone 5c -ன்
விலையை குறைக்க அதன் body plastic
அல்லாது poly carbonate ல் பல வண்ணங்களில்
தயாரிக்கப்பட்டுள்ளது

iPhone 5c-ன் சிறப்பம்சங்கள்:
display size - 4 inch
resolution - 1136*640
density - 326 ppi
processor - cortex A6 chip set
ram - 1gb
camera back -8 mp front 1.2mp