Pages

Saturday, 12 July 2014

புதிய வரவு ஆண்டிராய்டு ஸ்மார்ட் வாட்சு( Android smartWatch) google - ன்Android Wear இயங்குதளத்தைப் பயன்படுத்தி வெளியாகியுள்ளது


           
          அறிவியல் முன்னேற்றத்தின் புதிய வரவாக  ண்டிராய்டு        ஸ்மார்ட் வாட்சு( Android  smartWatch) google - ன் Android Wear இயங்குதளத்தைப் பயன்படுத்தி வெளியாகியுள்ளது.
   
          Android Wear- ஆனது google ன் ஆண்டிராய்டு ஸ்மார்ட்டு வாட்சு(smart watch) களுக்கான இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஆண்டிராய்டு இயங்குதளம் பதிப்பு 4.3 + -ல் செயல்படும் ஆண்டிராய்டு மொபைல்களில் Google Now- ன் மூலம் இணைக்கலாம். இத்திட்டத்தில்  மொபைல் தயரிப்பில் முன்னனி நிறுவனங்களான Motorola ,Samsung , lg, htc, asus - ஆகியவை இணைந்துள்ளன.

    Android Wear - ஐ பயன்படுத்தி Samsung -  நிறுவனத்தின் Gear Live மற்றும் LG–யின் G Watch - ஆகியவை விற்பனைக்கு வர உள்ளது ,மேலும் Motorola நிறுவனம் தனது Moto 360 smart watch-ஐயும் அறிமுகப்படுத்த உள்ளது, இந்த android wear ஆனது வட்டம் மற்றும் சதுரம் ஆகிய இரண்டு வடிவ வடிவமைப்பு வாட்சுகளுக்கும் ஏற்றது
   
   சிறப்பம்சங்கள் :            
             
                  இந்த android wear ஆனது நமது தகவல்களை ஒருங்கிணைப்பதோடு ,நமக்குத்தேவையான தகவல்களை நாம் கேட்கும் முன்பே காட்டுகின்றது ,மேலும் இது நமது நண்பர்களிடமிருந்து வரும் குறுந்தகவல்களையும்(message) ,முன்னேற்பாடுகளையும் (appointment), வானிலை மாற்றத்தையும் காட்டுகின்றது.
       

     இந்த android wear - ல் நமது குரலை பயன்படுத்தி எழுத்துக்களை தட்டச்சு செய்யவும், குறுந்தகவல்கள் மற்றும் Email ஆகியவற்றையும் பயன்படுத்தலாம், இதன் மூலம் நமக்குத்தேவையான தகவல்களை நேரடியாக கேட்டும் பெறலாம்.


         android wear - ஐ smart phone - உடன் இணைத்து பாடல்களை கேட்கவும், நிறுத்தவும் ,தவிர்க்கவும் முடியும் ,மேலும் குறுந்தகவல்களுக்கு எளிதாக பதிலும் தரலாம்.

        மேலும் இந்த android wear மூலம் நமது அன்றாட உடற்பயிற்ச்சித்தகவல்கள் மற்றும் இதயத்துடிப்பு சார்ந்த தகவல்களைப்பெறலாம், இந்த இதயத்துடிப்பு சார்ந்த தகவல்களை Heart rate monitor உள்ள smart watch - களில் மட்டுமே பெற முடியும்
    
      பொதுவாக Watch - கள் நேரத்தையும் ,தினத்தையும் மட்டுமே காட்டிய இந்நிலையில் ,மக்களுக்குப் பயன்னுள்ள இது போன்ற பல சாதனங்கள்   மக்களின் தேவைகளை  எளிமையாக்குகின்றன ,அவ்வகையில் இந்த android smart watch - கள் மக்களின் அன்றாட தேவைகளை எளிமையாக்கும் எனலாம்.

Thursday, 17 April 2014

Google-ன் android ற்கு போட்டியாக Mozilla-ன் firefox மொபைல் இயங்குதளம் அறிமுகம்





Firefox மொபைல் இயங்குதளம்  அறிமுகம்

        Google-ன் android மொபைல் இயங்குதளத்திற்கு  போட்டியாக Mozilla-நிறுவனம் தனது firefox மொபைல் இயங்குதளத்தை வெளியிட்டு உள்ளது. 

        Nokia மற்றும் Microsoft ஆகியவற்றின் மொபைல் இயங்குதளத்தை பயன்படுத்தி பல நிறுவனங்கள் தனது smart Phone - களை விற்பனைக்கு கொண்டுவந்தன, மேலும் APPLE நிறுவனம் தனது iPhone ற்கான iOS இயங்குதளத்தை வடிவமைத்து பயன்படுத்தியது ,இந்நிலையில் google நிறுவனம் தனது Smart Phone - க்கான Android இயங்குதளத்தை வடிவமைத்து வெளியிட்டது .இந்த இயங்குதளம் 
பயன்படுத்துவதற்கு எளிமையனதாகவும் பல Apps -களை தனது இயங்குதளத்தின் மூலமாகவே கொடுத்ததாலும் வாடிக்கையாளர்களிடம் பிரபலமடைந்தது.

     Android வெளிவந்த பிறகு Smart Phone - ன் வளர்ச்சி பல மடங்காக பெருகியது . Samsung நிறுவனம் இந்த இயங்குதளத்தை தனது Smart Phone - களில் புகுத்தி மொபைல் சந்தையில் அதிக  லாபத்தை ஈட்டியது ,ஆனால் Nokia நிறுவனம் Android - ஐ தனது Smart Phone - களில் பயன்படுத்துவதை தவிர்த்ததால் மொபைல் விற்பனையில் சரிவை சந்தித்து தனது நிறுவனத்தையே Microsoft - இடம் இழந்தது எனலாம் .


       இனைய உலாவி(Firefox Browser ) வடிவமைப்பில் முக்கிய நிறுவனமான Mozilla - வானது நீண்ட காலமாக மொபைல் இயங்குதளத்தை வெளியிடுவதாக இருந்தது பிறகு firefox OS - ன் முதல் பதிப்பை சோதனை பதிப்பாக வெளியிட்டது, இதில் இருந்த பிழைகளை நீக்கி தற்போது இதன் முழு பதிப்பு Firefox OS 2.0 -ஐ வெளியிட்டுள்ளது .

       Firefox os - ஐ கொண்ட தனது Smart Phone ஐ LG மற்றும் ZTE நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளது ,மேலும் Sony நிறுவனம் தனது Xperia E - க்கான சோதனை பாதிப்பை (Testing ROM ) ஐ வெளியிட உள்ளது ,எனவே இதன் மூலம் Sony நிறுவனமும் தனது smart  Phone- களில் Firefox OS - ஐ பயன்படுத்த உள்ளதை அறியலாம்.

Firefox os ன் அம்சங்கள் :

Firefox OS 2.0 will get a more active lock screen that shows a scrolling list of notifications and music controls.notification

     பயர்பாக்ஸ் os 2.0 ஆனது copy மற்றும் past ஆகிய செயல்பாடுகளை ஆதரிக்கின்றது ,மேலும் இது பயன்பாடுகளை( Apps ) - ஐ தொடங்குவதற்கு உலகளாவிய தேடல் நுட்பத்தை (universal-search mechanism)  கொண்டுள்ளது ,புதிய lock screen மற்றும் தொலைபேசி எண் அமைப்பு ஆகியவை mozilla firefox os - ன் வெற்றிக்கு முக்கிய அம்சங்களாக இருக்கும் எனலாம்






Sunday, 2 March 2014

நோக்கியாவின் புதிய x- வரிசை அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்



நோக்கியா X மற்றும் X+,XL என்ற தனது முதல் அண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது.

    

நோக்கியா நிறுவனம் நீண்டகாலமாக google -ன் அண்ட்ராய்டு இயங்குதளத்தை (os) தனது மொபைல்களில் பயன்படுத்துவதை தவிர்த்து Microsoft -ன் windows mobile இயங்குதளத்தை பயன்படுத்தி மொபைல்களை வெளியிட்டது, ஆனால் windows mobile -கள் மக்களிடையே பெரிய வரவேற்ப்பை பெறவில்லை.



        இந்தியாவில் மொபைல் விற்பனையில் முதலிடத்தில் இருந்த நோக்கியா , அண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்திய சாம்சங் ,சோனி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் வரவால் பின்னுக்குத்தள்ளப்பட்டது , எனவே நோக்கியா தன் மொபைல் விற்பனையை அதிரிக்க அண்ட்ராய்டு மொபைல்களை அறிமுகப்படுத்த உள்ளது .


       

 வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்


         நோக்கியாவின் X,X+ மற்றும் XL ஆகியவை 1GHz dual-core Qualcomm Snapdragon 8225 chipset –ஐ கொண்டது ,மேலும் இவை 4gb உள்நினைவத்தையும்,32gb மெமரி கார்டையும் பயன்படுத்தலாம் .



   Xமற்றும் X+ ஆகியவை 4" இன்ச் 800x480 IPS LCD capacitive தொடுதிரையை கொண்டது ,மேலும் இதன் pixel density  233ppi ஆகும் , X 512mb ram –ஐயும், 

X+, XL 768 ram–ஐயும் உடையது, Xமற்றும் X+ ஆனது 3mp fixed focusகேமரா வையும், XL 5mp auto focus கேமராவையும் உடையது