அறிவியல் முன்னேற்றத்தினால் பல புதிய சாதனங்கள் உருவாக்கப்பட்டு அவை மக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன,அந்த வரிசையில் தற்போது இன்டெல் நிறுவனம் தனது இன்டெல் கம்பியூட் ஸ்டிக் எனும் சாதனத்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளதது
இன்டெல் கம்பியூட் ஸ்டிக் :
ஒரு காலத்தில் பொரிய இடத்தை அடைத்துக் கொண்ட கணிப்பொறி அதன் பிறகு மேசைக் கணினி ஆனது, பிறகு மடிக்கணினியாக உருவானது, இப்போது அது மிகவும் சுருங்கி நம் கையினுள் அடங்கும் அளவிற்கு இன்டெல் நிறுவனம் இன்டெல் கம்பியூட் ஸ்டிக்(intel compute stick) எனும் சாதனத்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது
சிறப்பம்சம்:
கையடக்க பென்டிரைவ் (Pen drive) வடிவில் இச் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்டிக்கை HDMI இனைப்பு முறையில் நம் தொலைக்காட்சியில் (TV) உடன் இணைத்துப் பயன்படுத்த முடியும் , இன்டெல் கம்யூட் ஸ்டிக்கானது Microsoft இன் வின்டோஸ் 8.1 பிங் (windows8.1 bing) எனும் இயங்குதளத்தினை கொண்டுள்ளது ,மேலும் இந்தச் சாதனம் எந்த ஒரு HDMI இணைப்பு கொண்ட திரைக்கருவியிலும் பயன்படுத்தலாம்.
இச் சாதனம்
processor: quard core intel atom processor Z3735F (1.3Ghz),
Ram: 2GB DDR3,
Storage : 32GB,
Intel HD Graphics,
hdmi port,
Bluetooth,
Wifi,
USB 2.0
ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்தச் சாதனம் ரூபாய் Rs 9,999 ற்கு தற்போது சந்தைகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் இச்சாதனம் Flipkart, amazion போன்ற ஆன்லைன் தளங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது.