Pages

Saturday, 12 July 2014

புதிய வரவு ஆண்டிராய்டு ஸ்மார்ட் வாட்சு( Android smartWatch) google - ன்Android Wear இயங்குதளத்தைப் பயன்படுத்தி வெளியாகியுள்ளது


           
          அறிவியல் முன்னேற்றத்தின் புதிய வரவாக  ண்டிராய்டு        ஸ்மார்ட் வாட்சு( Android  smartWatch) google - ன் Android Wear இயங்குதளத்தைப் பயன்படுத்தி வெளியாகியுள்ளது.
   
          Android Wear- ஆனது google ன் ஆண்டிராய்டு ஸ்மார்ட்டு வாட்சு(smart watch) களுக்கான இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஆண்டிராய்டு இயங்குதளம் பதிப்பு 4.3 + -ல் செயல்படும் ஆண்டிராய்டு மொபைல்களில் Google Now- ன் மூலம் இணைக்கலாம். இத்திட்டத்தில்  மொபைல் தயரிப்பில் முன்னனி நிறுவனங்களான Motorola ,Samsung , lg, htc, asus - ஆகியவை இணைந்துள்ளன.

    Android Wear - ஐ பயன்படுத்தி Samsung -  நிறுவனத்தின் Gear Live மற்றும் LG–யின் G Watch - ஆகியவை விற்பனைக்கு வர உள்ளது ,மேலும் Motorola நிறுவனம் தனது Moto 360 smart watch-ஐயும் அறிமுகப்படுத்த உள்ளது, இந்த android wear ஆனது வட்டம் மற்றும் சதுரம் ஆகிய இரண்டு வடிவ வடிவமைப்பு வாட்சுகளுக்கும் ஏற்றது
   
   சிறப்பம்சங்கள் :            
             
                  இந்த android wear ஆனது நமது தகவல்களை ஒருங்கிணைப்பதோடு ,நமக்குத்தேவையான தகவல்களை நாம் கேட்கும் முன்பே காட்டுகின்றது ,மேலும் இது நமது நண்பர்களிடமிருந்து வரும் குறுந்தகவல்களையும்(message) ,முன்னேற்பாடுகளையும் (appointment), வானிலை மாற்றத்தையும் காட்டுகின்றது.
       

     இந்த android wear - ல் நமது குரலை பயன்படுத்தி எழுத்துக்களை தட்டச்சு செய்யவும், குறுந்தகவல்கள் மற்றும் Email ஆகியவற்றையும் பயன்படுத்தலாம், இதன் மூலம் நமக்குத்தேவையான தகவல்களை நேரடியாக கேட்டும் பெறலாம்.


         android wear - ஐ smart phone - உடன் இணைத்து பாடல்களை கேட்கவும், நிறுத்தவும் ,தவிர்க்கவும் முடியும் ,மேலும் குறுந்தகவல்களுக்கு எளிதாக பதிலும் தரலாம்.

        மேலும் இந்த android wear மூலம் நமது அன்றாட உடற்பயிற்ச்சித்தகவல்கள் மற்றும் இதயத்துடிப்பு சார்ந்த தகவல்களைப்பெறலாம், இந்த இதயத்துடிப்பு சார்ந்த தகவல்களை Heart rate monitor உள்ள smart watch - களில் மட்டுமே பெற முடியும்
    
      பொதுவாக Watch - கள் நேரத்தையும் ,தினத்தையும் மட்டுமே காட்டிய இந்நிலையில் ,மக்களுக்குப் பயன்னுள்ள இது போன்ற பல சாதனங்கள்   மக்களின் தேவைகளை  எளிமையாக்குகின்றன ,அவ்வகையில் இந்த android smart watch - கள் மக்களின் அன்றாட தேவைகளை எளிமையாக்கும் எனலாம்.